கொடைக்கானல்: சாலைகளில் சிதறும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

82பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 24 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்படும் குப்பைத் தொட்டிகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் குப்பைகள் எடுக்கும் இடத்திலேயே மீண்டும் விழுந்து விடுகின்றன. 

இந்த குப்பைகளை கொடைக்கானலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டருக்கும் மேல் கொண்டு சென்று அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் இருந்து கொண்டு செல்லும் குப்பைத் தொட்டிகள் சேதம் அடைந்ததால் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகள் சாலையில் அங்கங்கே விழுவதால் மீண்டும் சாலை குப்பையாகவே காட்சியளிக்கிறது. 

மேலும் சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு முறை சுத்தம் செய்யும் நிலைமையும் ஏற்படுகிறது. தொட்டிகளில் கிழிந்த தார்ப்பாய் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை ஒட்டுப்போடுவதால் குப்பை சேரும்போது பிளாஸ்டிக் கிழிந்து சாலையில் கொட்டப்படுகிறது. 

இக்காரணத்தால் சம்பந்தப்பட்ட கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் கொடைக்கானலில் உள்ள குப்பைத் தொட்டிகளை பராமரித்து புதிய குப்பைத் தொட்டிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடைக்கானல் வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி