கொடைக்கானல்: சுற்றுலா பயணிகள் மீது கொலை வெறி தாக்குதல்

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மதுரையிலிருந்து சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் மீது மூஞ்சிக்கல் பகுதியில் இயங்கி வரும் புகாரி உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர் அப்பொழுது அங்கு மீன் , கோழி போன்ற உணவுகளை ஆர்டர் செய்த பொழுது மீன் மற்றும் கோழி கெட்டுப் போவதை அறிந்து வாங்கிய உணவுகள் வேண்டாம் என்று கூறியதற்கு உணவு கடை உரிமையாளர்கள் திரும்பி வாங்க முடியாது என்று கூறியுள்ளனர்.

மேலும் உணவு அருந்த சென்றவருக்கும் கடை உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஈடுபட்ட போது அக்கடை உரிமையாளர்கள் அப்பகுதியில் உள்ள அனைவரும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு உணவு அருந்த வந்தவர்களை கொலை வெறி தாக்கியுள்ளனர்

மேலும் காயம் அடைந்தவர்கள் அங்கிருந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும் வந்து அவர்களை கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்

மேலும் சம்பவம் அறிந்த கொடைக்கானல் காவல்துறையினர் சகாயமடைந்தவர்கள் கொடுத்த புகாரின் பெயரில் குற்றவாளிகள் மீது ஏழு பிரிவின் மீது வழக்கு பதிவு செய்து கடையில் வேலை செய்த மூன்று நபர்களை கைது செய்துள்ளனர் மீது உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி