கொடைக்கானல்: இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

56பார்த்தது
கொடைக்கானல்: இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த சில மாதங்களாக இஸ்ரேலில் போர் நடைபெற்றதால் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக் கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

ஆனால் வழக்கமாக இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது. மேலும் கண்காணிப்புக் கேமராக்களும் செயல் இழந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளன. 

இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையைக் கருத்தில் கொண்டு போலீசார் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்புக் கேமராக்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும், பாதுகாப்பைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி