திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகிறார்கள்.
இந்நிலையில் திண்டுக்கல் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு சுதாகர் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்து உள்ளார்.
இந்நிலையில் கொடைக்கானல் ஏரி சென்று இரவு உணவு அருந்தி விட்டு தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர்.
இதில் வாகன ஓட்டி சுதாகர் சரிவான மலை சாலையில், முன் அனுபவம் இல்லாமல். இயக்கி உள்ளார்.
அப்போது உகார்தே நகர் பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற edious வாகனத்தின் மீது மோதி அருகே இருந்த வாய்க்காலில் வாகனத்தை இறக்கி உள்ளார்.
இதில் அதிர்ஷ்ட வசமாக முன்னே சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.