கொடைக்கானல்: பூத்து குலுங்கும் சிலுவை பூக்கள்

61பார்த்தது
கொடைக்கானல்: பூத்து குலுங்கும் சிலுவை பூக்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் சிலுவை வடிவிலான பூக்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் மட்டுமே இந்த வகை பூக்கள் பூக்கும். தற்போது புத்தாண்டு கொண்டாட உள்ள நிலையில் சிலுவை பூக்கள் கொடைக்கானலில் பூத்து குலுங்குவது அதனை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.இந்த பூக்களின் அருகே நின்று சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி