திண்டுக்கல், கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் மலைப்பாதையில், நோயாளியை ஏற்றி வந்த 108 அரசு ஆம்புலன்ஸ் பிரேக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதியது. இதில் கிளீனரும், நோயாளியும் பலத்த காயமடைந்தனர். சுற்றுலா வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மலைப்பகுதி ஆம்புலன்ஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினர்.