திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாரம் விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளனர் குறிப்பாக கேரளாவில் ஓணம் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இதில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த மூன்று டெம்போ வாகனத்தில் கேரளா இளைஞர்கள் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி கொண்டு வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாக வாகனத்தை ஓட்டி செல்கின்றன
எதிரே வரும் இரண்டு சக்கர மட்டும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்களை இடிப்பது போன்று வாகனத்தை வேகமாகவும் வாகனத்திற்கு வெளியில் தொங்கிய படியும் ஏரிசாலை முழுவதும் சென்றனர்.
இதனால் ஏறிச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டது வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் ஏரிச்சாலையில் கூடுதலாக காவலர்களை நியமித்தால் இதுபோன்று நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.