மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் குறித்து தகவல்

55பார்த்தது
இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதையடுத்து திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

2024ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் தளர்வு செய்யப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட பொதுமக்களிடம் குறைகளை களைந்திட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மனுக்கள் பெறும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 10. 06. 2024 காலை 10. 00 மணிக்கு நடைபெறும்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம், என வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி