திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது வழக்கம் இந்நிலையில் சென்னையில் இருந்து சுற்றுலா வந்த ஆறு இளைஞர்கள் அண்ணா சாலை பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டரில் மசாஜ் செய்வது போல் சென்று மூன்று பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது
சென்னை இளைஞர்களில் இருவர் தங்கும் வரையில் இருந்துள்ளனர் மீதமுள்ள நான்கு இளைஞர்கள் சூர்யா வயது 23 , திவாகர் வயது 18 சாலமோன் வயது 20, பிரேம்வயது 22 என்பவர்கள் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளனர்
மசாஜ் சென்டர் கதவை மூடிக்கொண்டு பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளனர் பெண்களின் உடைய கிழித்ததாகவும் தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது
அவர்களிடமிருந்து தப்பிய மூன்று பெண்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் நடந்ததை கூறியுள்ளனர்
வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் சென்று நான்கு பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதனால் கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.