திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி. மு. க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் ஆத்தூர் தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது கிராம மக்கள் சிலர் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர் அதை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் இந்தியாவிலேயே இதுவரை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பாரதபிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் வீடுகள் கட்டுவதற்கு சிரமமாக இருந்ததால் ஒருசில கிராம மக்கள் வீடுகளை கட்ட முடியாமலும், கட்டிய வீடுகளை விற்றும் உள்ளனர். அதற்கு காரணம் வீடு வழங்கும் திட்டம் மூலம் குறைவான நிதி வழங்கப்பட்டதால்தான்
ஆனால் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு ரூ. 3. 5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதுதவிர ஆத்தூர் தொகுதியில் சுமார் 2500 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சலுகை விலையில் வீடுகள் கட்டுவதற்கான தளவாட சாமான்களை கொடுத்து வருகிறோம் என்றார். அரசு வேலை வாய்ப்பு வேண்டி கிராமப்புற பெண்கள் பலர் மனு கொடுத்துள்ளனர்.