திண்டுக்கல், YMR-பட்டி பகுதியை சேர்ந்தவர் சரோஜா(50). இவருக்கும் திண்டுக்கல், அனுமந்தநகரை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ்குமார்(20) என்பவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை காரணமாக விக்னேஷ்குமார், சரோஜாவை அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.