திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தொடங்கி வைத்து, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட காளை வடிவ சிற்பத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலகங்களையும் துாய்மைப்படுத்தும் வகையில் கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், மொத்த விற்பனையாளர்களிடம் விற்பனை செய்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் இராஜராஜேஸ்வரி உதவி பொறியாளர்கள் அனிதா, தாரணி மற்றும் உதவி மேலாளர் ஜான்சி ராணி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் தங்கராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முகமது தஸ்நீம், பாபு மற்றும் ஜமால்முகமது, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர்(கல்வி) சரவணக்குமார், முதலமைச்சரின் பசுமை நிர்வாகி கார்த்திகா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.