திண்டுக்கல்: ரூ. 100 தாண்டிய சின்ன வெங்காயத்தின் விலை

59பார்த்தது
திண்டுக்கல் பைபாஸ் ஈபி அலுவலகம் அருகே உள்ள வெங்காய பேட்டைக்கு திருப்பூர் , தாராபுரம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 300 டன்னுக்கு மேல் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக முதல்தரம் சின்ன வெங்காயம் ரூ. 70 , 2ம் தரம் ரூ. 30க்கு விற்பனையானது.

மழை காரணமாக வெளி மாவட்ட வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால் முதல் தரம் சின்ன வெங்காயம் ரூ. 100க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்தால் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி