வத்தலகுண்டு: பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை

60பார்த்தது
வத்தலகுண்டு: பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஜி. தும்மலப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கொடைக்கானல் கீழ்மலை பூலத்தூர் அடிவாரம் கோபால்சாமி கோயில் செல்லும் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மா, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். 

இந்த நிலையில், பூலத்தூர் வனப்பகுதியிலிருந்து தினந்தோறும் இரவு நேரங்களில் வெளியேறும் வன விலங்குகள் இந்த விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து விவசாயி கோபி கூறியதாவது: இந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வத்தலகுண்டு வனத் துறையிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விவசாயத் தோட்டங்களையும், விவசாயிகளின் உயிர்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி