சிறுமலையில் அமைக்கப்பட்டுள்ள பல்லுயிா் பூங்கா

1069பார்த்தது
சிறுமலையில் அமைக்கப்பட்டுள்ள பல்லுயிா் பூங்கா
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை வனப் பகுதி சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1, 650 மீட்டா் வரையிலான உயரத்தில் அமைந்துள்ள சிறுமலையில், காட்டெருமை, செந்நாய், மான், கேளையாடு, முள்ளம் பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. மேலும், பல்வேறு மூலிகைச் செடிகளும், அரிய வகை மரங்களும் உள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிறுமலைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனா். ஆனாலும், பாா்த்து ரசிப்பதற்கு பூங்காக்கள் இல்லை என்பது சுற்றுலாப் பயணிகளின் குறைபாடாகவே இருந்தது. இதற்குத் தீா்வு காணும் வகையில், சிறுமலை புதூரிலிருந்து தென்மலை செல்லும் வழியில் 100 ஏக்கா் பரப்பளவில் பல்லுயிா் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கின. வனத் துறை சாா்பில் ரூ. 5 கோடியில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவுக்கு பல தொகுப்புகளாக நிதி விடுவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 4 ஆண்டுகளாகியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக விடுவிக்கப்படாததால், பூங்கா அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிறுமலையில் ஆக்கிரமிப்புக் காடுகளில் 3 அருவிகள் உள்ளன. அரசியல் காரணங்களால், காப்பு நிலங்களிலிருந்து காப்புக் காடுகளாக மாற்றும் பணியில் தொய்வு ஏற்றபட்டுள்ள நிலையில், அருவிகளை மீட்பது வனத் துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி