அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம்

975பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் "அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தில்" விண்ணப்பித்து கடனுதவி பெற்று பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக அண்ணல் அம்பேத்கர் பிசினஸ்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக சாம்பியன்ஸ் திட்டம்" (AABCS) இயங்கி வரும் தொழில்களை விரிவாக்கம் செய்திடவும் தொழில் முனைவோர்கள் உருவாக வும், சிறப்பு திட்டமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி ஏதுமில்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே துவங்கப்பட்ட நிறுவனம் தனது விரிவாக்கத்திற்கும் மற்றும் புதிதாக துவங்கவிருக்கும் நிறுவனமும் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதி பெற்றதாகிறது. மேலும், தனி நபர் நிறுவனம், பங்குதாரர் நிறுவனம் மற்றும் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகிய அனைத்து வகை தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதி வாய்ந்தது.
நேரடி வேளாண்மை தவிர்த்த வணிகம். சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதார
ரீதியான சாத்தியப்படக்கூடிய தொழில் துவங்க வாடகைக்கு விடப்படும் பயண வாகனங்கள்
மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் கொள்முதல் செய்திடவும் ரூ. 1. 5 கோடி வரை மானியம்
பெறுமளவிற்கு கடனுதவி வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

மொத்த திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் கடனுதவியாகவும் 35 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் பங்குத் தொகை யாக ஏதும் செலுத்தத் தேவையில்லை. மேலும், கடனை சரியாக திருப்பி செலுத்தும் விண்ணப்பதார்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவ னம் மூலம் இலவசமாக வழங்கப்படும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https: //www. msmetamilnadu. tn. gov. in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு, உரிய இணைப்பு பெறப்பட்டவுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து
பயனடைய அல்லது இது குறித்து மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொ ழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451- 2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி