அ. தி. மு. க. , விற்கு அசுரபலம் முன்னாள் அமைச்சர் பேச்சு

386பார்த்தது
அ. தி. மு. க. , விற்கு அசுரபலம் முன்னாள் அமைச்சர் பேச்சு
வத்தலக்குண்டு: ''பா. ஜ. , கூட்டணியிலிருந்து வெளியேறியதால் அ. தி. மு. க. , விற்கு அசுரபலம் கிடைத்துள்ளதாக, '' முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். வத்தலக்குண்டில் நடந்த ஒன்றிய அ. தி. மு. க. , பூத் ஏஜென்ட்களுக்கான விளக்க கூட்டத்தில் அவர் பேசியதாவது: நமது வெற்றிக்கு தடையாக இருந்த பா. ஜ. , வை கூட்டணியிலிருந்து வெளியேற்றி உள்ளோம்.

இதனால் அ. தி. மு. க. முன்பை விட பலத்துடன் உள்ளது. மத்தியில் ஆளும் பா. ஜ. , மாநிலத்தில் ஆளும் தி. மு. க. , மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் மக்கள் உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர். இந்த தருணத்தில் பா. ஜ. , அணியிலிருந்து வெளியேறியதால் நமக்கு அசுர பலம் கிடைத்துள்ளது, என்றார். ஒன்றிய செயலாளர்கள் மோகன், பாண்டியன் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் ராஜசேகரன், மாசாணம், பீர்முகமது முன்னிலை வகித்தனர். தேன்மொழி எம். எல். ஏ. , பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி