குட்கா கடத்திய 4 பேர் கைது

64பார்த்தது
குட்கா கடத்திய 4 பேர் கைது
கொடைரோடு அருகே கார்களில் குட்கா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 8 மூட்டைகள் குட்கா, 2 கார், ரூ. 40 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல், கொடைரோடு டோல்கேட் அருகே நிலக்கோட்டை டிஎஸ்பி துணை கண்காணிப்பாளர் தலைமையில் அம்மையநாயக்கனூர் (பொறுப்பு) குருவெங்கட்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக காரை நிறுத்தி சோதனை செய்ததில் விருதுநகரை சேர்ந்த பெரோஸ்கான்(36). இவர் 4 மூட்டைகளில் கடத்தி வருவது தெரியவந்ததை அடுத்து பெரோஸ்கானை கைது செய்து விசாரணை நடத்தி திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஆசாருதீன்(30), M. V. M. நகரை சேர்ந்த ஹாருன் ரசீத்(27), திண்டுக்கல், வாணிவிலாஸ் மேடு வெங்காய பேட்டையில் சொகுசு காரில் குட்கா பதுக்கி வைத்திருந்த பட்டாராம்(27) ஆகிய 3 பேரை கைது செய்து 8 மூட்டைகள் குட்கா, 2 கார், ரூ. 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you