திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் வத்தலகுண்டு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு 43 கிலோமீட்டர் வரை மலைச்சாலையை கடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து பழனி, தாராபுரம், ஈரோடு செல்லும் அரசு பேருந்து பெருமாள் மலை செல்லும் பொழுது விதிகளை மீறி வலது பக்கமாக வளைவில் பேருந்தை இயக்கியுள்ளார். அப்பொழுது வத்தலகுண்டில் இருந்து பள்ளங்கி செல்ல அழகுமலை என்பவர் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் சென்றுள்ளார்.
அப்பொழுது அரசு பேருந்தில் பின்புறத்தில் உள்ள சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கியுள்ளது அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
அரசு பேருந்து ஓட்டுனர் பாலசுப்பிரமணி இருசக்கர வாகனத்தை விபத்துக்குள்ளானதையே கவனிக்காமல் இருவது அடி தூரம் தள்ளி பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் அழகுமலை இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்ததனால் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் பேருந்துகள் ஒலி எழுப்பாமல் வளைவுகளில் மிகுந்த வேகத்துடனும் விதிகளை மீறி ஓட்டுவதாலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. அரசு நிர்ணயித்த வேகத்தையும் பொருட்படுத்தாமல் அதிவேகமாக இயக்கம் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்குவதால் அதிக விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.