திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், கடந்த 2019-ஆம் ஆண்டில் போலீஸாா் நிலக்கோட்டை பகுதியில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், நிலக்கோட்டை, விலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாயராஜை (52) கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாயராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செங்கமலச்செல்வன் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் தங்கேஸ்வரன் முன்னிலையாகி வாதிட்டாா்.