வத்தலகுண்டு: தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை முயற்சி

64பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நபர் ஆறுமுகம் என்பவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறுமுகத்தின் சகோதரர்கள் வேல்முருகன், சக்திவேல் ஆகிய இருவரும் சேர்ந்து முருகன் என்ற நபரை இரும்பு கம்பி கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியும், நிலைகுலைந்து சரிந்த முருகனை கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயற்சித்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த முருகனை அப்பகுதி மக்கள் காப்பாற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தற்போது வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி