வேடசந்தூர்: காணாமல் போன டாக்டர் கொடைக்கானலில் பிணமாக மீட்பு

74பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஜோஸ்வாசாம்ராஜ்(29) இவர் காணவில்லை என்று வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில்

இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை அருகே நின்று கொண்டிருந்த காரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல் காவல்துறையினர் காரின் கதவைத் திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் பிணம் இருந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது
வேடசந்தூரை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஜோஸ்வாசாம்ராஜ்(29) என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொடைக்கானல் போலீசார் ஜோஸ்வாசாம்ராஜ் இறப்பு கொலையா? தற்கொலையா? வேறேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி