கம்பளியம்பட்டி வரசித்தி வராகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

58பார்த்தது
கம்பளியம்பட்டி வரசித்தி வராகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி புதன்கிழமை ஊஞ்சல் உற்சவம், விளக்கு பூஜை
வாராகி அறக்கட்டளையின் தலைவர் சஞ்சீவிகுமார் சாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இதில் வாராகி அம்மனுக்கு யாக பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திண்டுக்கல், கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம், செந்துறை, சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

இவ்பூஜைக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராகி அம்மன் பக்தர்களும், கம்பிளியம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் வாராகி அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி