ஜோதிடத்தில் ராகு கேது பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. நிழல் கிரகமான ராகு கேது, அவை சஞ்சரிக்கும் ராசியின் பலன்களை தருவார். அதன்படி நேற்று பிற்பகல் 3. 40க்கு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகுவும், துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி அடைந்தனர்.
இதனை முன்னிட்டு நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவிலில் உள்ள ராகு கேது பகவானுக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி,
ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது 1½ வருடங்கள் இந்த ராசியில் இருந்து பலன்களை தரவுள்ளார். இதில் நத்தம் மீனாட்சிபுரம், அசோக் நகர், கோவில்பட்டி, மூங்கில்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.