திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையொட்டிபெருமாள் திருப்பதி அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அபிஷேகம் மற்றும் தீபாவனை நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே
வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில்
கதிர் நரசிங்க பெருமாள்,
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வி. டி. பட்டி பெட்டி பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது.