சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ டிரைவருக்கு சிறை

1516பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ டிரைவருக்கு சிறை
நத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (25). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் லிங்கவாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து போலீசில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 2 வருடமாக நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சரண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ஆட்டோ டிரைவர் சுரேஷிற்கு 25 வருடம் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி