100நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து சாலைமறியல்

74பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புன்னப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று பணிக்குச் சென்ற பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து வேலைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை எனக் கூறி வேலை வழங்க மறுத்து பணித்தள பொறுப்பாளர்கள் அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் திண்டுக்கல் நத்தம் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் புன்னப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இச்சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக திண்டுக்கல் - நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி