வாராகி அம்மன் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை

66பார்த்தது
வாராகி அம்மன் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை பூஜையையொட்டி நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடந்த யாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மழை வேண்டி நடந்த பூஜையில் முன்னதாக வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். அமாவாசை சூழயாக வேள்வி பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். முன்னதாக பூஜைக்கு பக்தர்கள் வர மிளகாய்களை மூட்டை மூட்டையாக வழங்கினர். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். இதில் திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்களுக்கு கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராஹி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி