திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோசுகுறிச்சி ஊராட்சி ஒன்றியம் கரையூர் அருகே சாலையைக் கடக்க முயன்ற காட்டெருமை கன்று மீது மதுரையில் இருந்து திருச்சிக்கு சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மேல் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.