மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (45) சமூக ஆர்வலரான இவர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையத்தில் நூதன முறையில் கையிலும், கழுத்திலும் விழிப்புணர்வு பதாகைகளை தொங்க விட்டு பிரசாரம் செய்தார்.
இதில் புத்தாண்டை மது போதை இல்லாமல் கொண்டாட வேண்டும், மது போதை மனிதனை மிருகமாக்கும், பணம் பொருள் வாங்காமல் வாக்களிக்க, நாம் அனைவரும் உறுதி ஏற்போம், நம் பண்பாடு, கலாச்சார, நாகரிகங்களை பாதுகாத்து நாம் வாழ வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளிடன் நத்தம் பேருந்து நிலையம், வார சந்தை, மதுரை சாலை உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.