நத்தம்: உடைந்த பீர் பாட்டிலை காட்டி பணம் பறிப்பு

79பார்த்தது
நத்தம்: உடைந்த பீர் பாட்டிலை காட்டி பணம் பறிப்பு
திண்டுக்கல்லை சேர்ந்த பாலன் என்பவர் சிறுமலை பிரிவு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துகாமாட்சி, பொன்னுமாந்துறையை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், நல்லாம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (எ) பொசு பொசு பாலு ஆகிய 3 பேரும் பாலனிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலைமிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி