திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு உயர் நிலைப்பள்ளியின் சத்துணவு கூடத்தில் உணவு தயாரிக்கும்போது, எரிவாயு சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு வெடித்ததில் சமையலர் மற்றும் உதவியாளருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சமையல் கூடத்தில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்த நிலையில், நத்தம் வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து தொடர்பாக நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.