முன்னாள் அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் இரா. விசுவநாதன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் கட்டிடத்தின் முகப்பு பகுதியில் அவரது பெயரும் எழுதப்பட்டிருந்தது.
தற்போது அவர் பெயர் எழுதப்பட்டிருந்த முகப்பு பகுதியில் புதிதாக பெயிண்ட் அடித்து மறைக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் கண்ணன் தற்காலிக கல்லூரிக்கு வந்து காவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அந்தப் பெயரை எழுத எங்களுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், கல்லூரி திறப்பு விழாவிற்கு தற்காலிக கல்லூரி வாசலில் வைக்கப்பட்ட திமுகவின் பிரம்மாண்ட பேனர்கள் கூட இன்னும் அகற்றப்படாத நிலையில் உள்ளே எழுதப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரை அழிப்பதற்கான அவசியம் என்ன என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் அங்கு வந்த திண்டுக்கல் ரூரல் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அரசு கல்லூரிகளில் யாருடைய பெயரும் இடம்பெற கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் இங்கிருந்த பெயர் அழிக்கப்பட்டது என விளக்கம் அளித்தார். அவரின் விளக்கத்தை ஏற்காத அதிமுகவினர் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த அதே இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெயரை எழுதுவோம் எனக் கூறி அந்த இடத்தில் மீண்டும் எழுதி சென்றனர்.