திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் மந்தை பகவதி அம்மன் கோவில் முன்பாக ஹரிஹர சுதன் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 27 ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்ற பக்தர்கள் ஊர் தெய்வங்களுக்கு பழம் வைத்து வழிபட்டனர் பின்னர் பூக்குழி இறங்கும் பக்தர்களின் பாதங்களில் பால் ஊற்றி பாத பூஜை செய்யப்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து பூக்குழி இறங்கினர். மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டி பிராத்தனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து மந்தை பகவதி அம்மன் கோவில் பூசாரிகள் மற்றும் முருக பக்தர்கள் ஓம்சக்தி பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
இந்த வினோத நிகழ்ச்சி மற்றும் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.