நத்தம்: திருவள்ளுவர் உருவப்படத்தில் 1330 குரல்

62பார்த்தது
முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக வள்ளுவம் போற்றும் வெள்ளிவிழா என தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் விழா கொண்டாடி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரில் வசித்து வரும் குழந்தைவேல் - ஜெயமணி தம்பதியரின் மகன் சுஜய் (வயது 12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 

இவர் ஏற்கனவே 1330 குறள்களை ஒப்பித்து பரிசுகள் பல பெற்றுள்ளார். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டு வெள்ளி விழாவை நினைவுபடுத்தும் விதமாக திருவள்ளுவரின் உருவம் அச்சிடப்பட்ட பிளக்ஸ் பேனரில் 12 மணி நேரத்தில் 1330 குறளையும் வள்ளுவரின் உருவம் முழுவதிலும் நிரப்பும் விதமாக எழுதி முடித்துள்ளார். 

திருவள்ளுவரின் மேல் இருக்கும் பற்றினாலும் திருக்குறளின் மேல் இருக்கும் பற்றினாலும் இதை எழுதியதாக அந்த மாணவன் தெரிவித்தார். 12 மணி நேரத்தில் திருவள்ளுவரின் உருவத்தில் 1330 திருக்குறளையும் எழுதிய 12 வயது சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி