திண்டுக்கல் மாவட்டம் சாணார்ட்டி அருகே ஆவிளிபட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் (42) விவசாயி. இவரது மோட்டார் சைக்கிளை அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூக்கன் என்பவர் கடைக்கு எடுத்துச் சென்றார். அப்போது கோபால்பட்டி பாறை ப்பட்டி சாலையின் அருகே உள்ள பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றார். பின்னர் குளிர்பானம் வாங்கி திரும்பி பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து திருடன் திருடன் என்று கூச்சலிட்டு திருடனை துரத்தியபோது மின்னல் வேகத்தில் அந்த நபர் மோட்டார் சைக்கிளை திருடி தப்பி சென்று விட்டார். இது குறித்து தினேஷ் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் பதிவாகி இருக்கும் கண்காணிப்பு கேமராக்க ளின் காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.