திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆா். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, பாலப்பன்பட்டி, வடபருத்தியூா், வேலம்பட்டி, வாகரை, பொருளூா், கொத்தையம், மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, தேவத்தூா், 16-புதூா், அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி, கே. கீரனூா், ஜ. வாடிப்பட்டி, குத்திலுப்பை, சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 1000 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவைத் தோதல் முடிந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை கிடைக்காத அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரக் கூட்டத்தில், வேட்பாளா் ஆா். சச்சிதானந்தம், தொப்பம்பட்டி ஒன்றியக் குழுத் தலைவி சத்திய புவனா, துணைத் தலைவா் பி. சி. தங்கம், மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் சி. இராஜாமணி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலா் க. தங்கராஜ், துணைச் செயலா் ராஜ்குமாா், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் இரா. தெண்டபாணி, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் ஆனந்தன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.