குழந்தை கடத்தலில் ஈடுபட்ட மனநிலை பாதிக்கப்பட்ட பெண்!

72பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டியில் செவ்வாய்கிழமை மாலை (60 வயது) மதிக்கத்தக்க பார்பதற்கு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள ஒரு பெண் ஒரு சிறு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். மேலும் அந்த குழந்தை அம்மா என அழுதபோது அதன் வாயை பொத்தி மிரட்டியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவர் தனது பேத்தி என கூறியுள்ளார். அவரது பெயர் முகவரி கேட்டபோது முன்னுக்கு பின் பேசியுள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த ஆட்டோ ஒட்டுநர்கள் அருகிலுள்ள கோபால்பட்டி புறநகர் காவல்நிலைய போலீஸாரிடம் பெண்ணையும் குழந்தையையும் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை சாணார்பட்டி போலீஸ்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு குழந்தையின் புகைப்படத்தை வாட்ஸ்அப்(கட்செயலி) மாவட்டத்தின் மற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சமூக வலைதளங்ஙளிலும் இந்த செய்தி வேகமாக பரவியது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட குழந்தையை காணவில்லை என திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கோடுத்த திண்டுக்கல்லை அடுத்த அழுகுபட்டியை சேர்ந்த மாரியம்மாள் என்பவரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்த மாரியம்மாள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் நேரில் வந்து காணாமல் போன தனது பெண் குழந்தையை அடையாளம் காட்டி கண்ணீர் மல்க பெற்று கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி