குஜிலியம்பாறை: புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்

82பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் புதியதாக முப்பது லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். அதன் பிறகு குஜிலியம்பாறையில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு 31 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்எல்ஏ எஸ் காந்திராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, குஜிலியம்பாறை ஒன்றிய பெருந்தலைவர் சீனிவாசன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சசி ராஜலிங்கம், வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன் வடமதுரை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவே கிருஷ்ணன், பாளையம் பேரூர் செயலாளர் கதிரவன், பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், மற்றும் வேடசந்தூர் வடமதுரை திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி