உலகம்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில், முள் எலி ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையில், வனவர் பீட்டர் ராஜா, வனக்காப்பாளர் கல்யாணி ஆகியோர், அங்கு விரைந்தனர். முள் எலியை மீட்டு, கன்னிவாடி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த எலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கன்னிவாடி வனப்பகுதியில் விட்டனர்.