திண்டுக்கல் - கரூர் எல்லை பகுதியான கல்வார்பட்டி சோதனை சாவடியில் கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஏட்டையாக்கள் கணேஷ் ராஜா சாமிவேல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருச்செந்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்தில் திண்டுக்கல் மரியனாதபுரம் காட்சன் (27) என்பவரும் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சேர்ந்த ஜெகநாத் (27) என்பவரும் கொண்டு சென்ற மூன்று கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.