வாரச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான ஆடுகள்!

84பார்த்தது
வாரச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான ஆடுகள்!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற வாரச்சந்தையில் திண்டுக்கல், சித்தையங்கோட்டை, நத்தம், கோசுகுறிச்சி, அய்யலூர் இருந்து வெள்ளை, செம்மறி ஆடுகளை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனர். கிராமங்கள் தோறும் வைகாசித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நாளை சுபமுகூர்த்த நாள் என்பதாலும் ஆடுகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்து ஆடுகளை வாங்கிச்சென்றனர். சுப நிகழ்ச்சிகளில் சமையலுக்கு பயன்படுத்தவும், வைகாசி மாதத்தில் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாகவும் ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது. மிகவும் பிரபலமான கோபால்பட்டி ஆட்டுச்சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் ஒவ்வொரு ஆடுகளும் சுமார் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கோபால்பட்டியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானதால் வியாபாரிகளும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி