திண்டுக்கல் மாவட்டம் நத்தம் இராம்சன்ஸ் பள்ளிகள் குழுமம், இராம்சன்ஸ் டிரஸ்ட் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு பள்ளித் தாளாளர் ராமசாமி தலைமை தாங்கினார் இராம்சன்ஸ் டிரஸ்ட் பாஸ்கரன் நிர்வாகி முன்னிலையில். மருத்துவ சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர், ராஜ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கண்புரை, கண் எரிச்சல், கன்ணில் புரை உள்ளவர்களுக்கு லென்ஸ் இலவசமாகப் பொருத்தப்பட்டது, பார்வை குறைபாடு உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.