திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணி வீரராகவன் தலைமை தாங்கினார். முகாமில் கண்புரை, கண் எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.