திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்காணிப்பதற்காக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நள்ளிரவு 12 மணி அளவில் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடன் சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது. மேலும் அங்கிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் என அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.