திண்டுக்கல்: மீன் மார்க்கெட் அமைப்பதற்கு இடம் ஆய்வு

67பார்த்தது
திண்டுக்கல்: மீன் மார்க்கெட் அமைப்பதற்கு இடம் ஆய்வு
திண்டுக்கல், நாகல்நகர் குடகனாறு இல்லம் அருகில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மீன் மார்க்கெட் அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் பற்றி மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆய்வு மேற்கொண்டார். தற்போது சோலைஹால் ரோட்டில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டை உரிய இடம் போக்குவரத்து பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் புதிய இடத்திற்கு மாற்ற மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் நகர ஆய்வர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி