திண்டுக்கல் ஆர்வி நகர் 23வது வார்டுக்குட்பட்ட மலைக்கோட்டை அடிவாரம் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இன்று (டிசம்பர் 26) மண்டல பூஜையை முன்னிட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தொடங்கி வைத்தார். உடன் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் இருந்தனர்.