திண்டுக்கல் மாவட்டம் வன்னியபாறைப்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அம்மனுவில் தங்கள் கிராமத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் பிரான் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள குளங்களில் அதிக அளவு மண் எடுப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். சிலர் தங்களது நிலத்திற்கு மண் தேவை என கூறி குளங்களில் அதிக ஆழமாக தோண்டி அந்த மண்ணை வியாபாரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லாததால் மீண்டும் மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காவிட்டால் சுற்றியுள்ள கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.