திண்டுக்கல்: என்ஜின் கோளாறு.. நாகா்கோவில் ரயில் தாமதம்

70பார்த்தது
திண்டுக்கல்: என்ஜின் கோளாறு.. நாகா்கோவில் ரயில் தாமதம்
கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக நாகர்கோவிலுக்கு நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து காலை புறப்பட்ட இந்த ரயில், திண்டுக்கல் மாவட்டம், எரியோடு ரயில் நிலையத்திற்கு வந்தபோது, என்ஜினில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்தப் பழுதைச் சரிசெய்ய முயன்றும் முடியாததால், திண்டுக்கல்லிலிருந்து மாற்று என்ஜின் அனுப்பப்பட்டது. இதனால், பகல் 12.20 மணி முதல் பிற்பகல் 2.55 மணி வரை எரியோடு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மாற்று என்ஜின் பொருத்திய பிறகு திண்டுக்கல் நோக்கி ரயில் புறப்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 1.35 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் பிற்பகல் 3.18 மணிக்கு சுமார் 1.40 நிமிடங்கள் தாமதமாக வந்தடைந்தது.

தொடர்புடைய செய்தி