திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்தது

67பார்த்தது
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்தது
தமிழ்நாடு பிரிமியர் லீக் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த 8-வது டி என் பி எல் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதியது. டாசில் வெற்றி பெற்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி பேட்டிங் செய்தனர். அந்த அணியினர் தொடக்கம் முதலே அடித்து விளையாடி விறுவிறுப்பாக ரன்கள் சேர்த்தனர், 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது, இந்த 8-வது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இதுதன் அதிகபட்ச ரன்கள் ஆகும்
அந்த அணியில் அதிகபட்சமாக சிவம் சிங் 57 பந்துகளில் 106 ரன்கள்(10 சிக்சர்கள், 6 பவுண்டரிகள்) எடுத்தார். மதுரை பேந்தர்ஸ் அணி தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 2 குர்ஜத்நீத், முருகன் அஸ்வின், மிதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்

இதை தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் மதுரை அணி பேட்டிங் செய்தது
தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த மதுரை வீரர்கள் 10 ஓவர்களுக்கு பின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களை மட்டும் எடுத்தனர்,

தொடர்புடைய செய்தி